சிந்திப்பதை நிறுத்திய தோழர் சங்கரையாவிற்கு சிரம்தாழ்ந்த அஞ்சலி மரியாதை – இரங்கல் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

Thursday, November 16th, 2023

மானுட விடியலை நேசித்து மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணம் ஆக்கியோருக்கு மரணமில்லை. அவர்கள் இறப்பினும் இறந்ததாக சொல்லப்படுவதில்லை,.. மாறாக,.. சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்கள் என்பதே அர்த்தம்,

தோழர் சங்கரையா இந்திய இடது சாரி இயக்க பெரு விருட்சத்தின் ஆணி வேர்களில் ஒருவர்.

சமூக நீதி, சமத்துவ உரிமை, தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்ற கோசங்களின் அடையாளமாக திகழ்ந்தவர்.

கால மாற்றத்திற்கு ஏற்றவாறு புரட்சிகர செயற்பாட்டு  எண்ணங்களை கொண்டிருந்தவர் எமது ஆரம்ப கால நீதியான உரிமை போராட்டத்திற்கு ஆதரவு தந்தவர்.

மாறாத தனது இடது சாரித்துவ வழி நின்று நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து முடித்தவர்,.. அவர் சிந்திப்பதை நிறுத்தினாலும் அவரது சிந்தனைகளும்செயலாற்றிய காரியங்களும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

தோழர் சங்கரையா அவர்களுக்கு ஈழத்தமிழ் மக்களின் சார்பாக எனது அஞ்சலி மரியாதை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

தேசிய நல்லிணக்கமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிறந்த வழிமுறையாகும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
தொடரும் மழையால் எள் செய்கை பாதிப்பு - இழப்பீடு பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸிடம் குடாநாட்டு விவசா...
கோண்டாவில் கலைவாணி இந்து மயான பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் - நிலமைகள் தொடர்பில் ஆ...

ஆட்சியில் பங்கெடுத்துள்ள கூட்டமைப்பு அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றது - ஈ.பி.டி.பி தெரிவிப...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டம் வெற்றி: இறால் அறுடைக்கான அனுமதிக்கான அனுமதிகளை வழங்கியது ...
எக் ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் பாதிப்பு குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளை விசேட...