சிகிச்சை பெற்றுவரும் வடக்கு முதல்வரை பார்வையிட்டார் டக்ளஸ் தேவானந்தா!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டதுடன் சுகநலம் தொடர்பிலும் கேட்றிந்துகொண்டார்.
யாழ் போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம்(27) விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண முதல்வரை பார்வையிட்டார்.
நேற்றுமுன்தினம் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் விக்னேஸ்வரன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையியேலயே டக்ளஸ் தேவானந்தா வைத்தியசாலைக்கு சென்று அவரது சுகநலம் தொடர்பாக அக்கறையுடன் கேட்டறிந்துகொண்டார். இதன்போது முதல்வரும் தமது சுகநலம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்தரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - வவுனியா மொத்த வியாபாரிகள் சங்கம் விஷேட சந்திப்பு!
சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடருமானால், 2018ஆம் ஆண்டு சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ...
யாழ் மாவட்டத்தின் கிராம அலுவலகளுடன் அமைச்சர் டக்ளஸ் அவசர கலந்துரையாடல்!
|
|