சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் – அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, July 8th, 2024

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சார்ளஸ் ஆகியோருடான கலந்துரையாடலில் இதனை வெளிப்படுத்தினார்.

மேலும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமூகமான சூழலை ஏற்படுத்துவதற்கு, குறித்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு விடுமுறையில் வழங்குவதுடன், பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களை மீளவும் கடமைக்கு திரும்பச் செய்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை முதற் கட்டமாக ஆரம்பிப்பது.

பின்னர், விசாரணைக் குழு ஒன்றினை நியமித்து, வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள், அவை நீண்ட காலமாக நிவர்த்தி செய்யப்படாமைக்கான காரணம், மற்றும் வைத்தியர் அர்ச்சுனா தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் போன்றவை தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு, அதனடிப்படையில் இறுதித் தீர்மானத்தினை மேற்கொள்ளுவது தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

குற்றச்சாட்டுகளை திசைதிருப்புவதில் முன்னின்று உழைத்தவர்களை காணாமற்போனோர் அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்த...
சுயநல அரசியல்வாதிகளின் பிரதேசவாதத்தால் மக்களின் அபிலாசைகள் முடக்கப்படுகின்றது - பூநகரியில் டக்ளஸ் எம...
இணுவில் புகையிரத கடவை கோர விபத்து - அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை! - கட்சி நிதியிலிருந்து வழங்கவ...

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். எதிர்காலத்தை வளம் மிக்கதாக கட்டியெழுப்ப நம்பிக்கையுடன் அணி திரண்டு ...
கடற்றொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதிக்கும்  நடவடிக்கை களுக்கு நாம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போ...
யாழ்ப்பாணம் கொட்டடி முத்தமிழ் விளையாட்டுக் கழக விளையாட்டு மைதானத்தை சம்பிரதாய பூர்வமாக திறந்துவைத்த...