சட்ட விரோத தொழில் முறைமைகளை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை – கடற்றொழில் திணைக்களம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!
Thursday, September 14th, 2023
சட்ட விரோத கடற்றொழில், தொழில் முறைமைகளை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேவையற்ற காரணங்களை தெரிவிக்காமல், கடற்றொழில் திணைக்களம், சரியான பொறிமுறையின் மூலம் விரைவான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றையதினம்(14.09.2023) விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சட்டவிரேத தொழில் நடவடிக்கையின் காரணமாக தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தெரிவித்த போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டது.
முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பல்துறை சார் தரப்பினருடனும் சந்திப்பக்களை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுழியோடி கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் பயனாளர்களையும் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களை உச்சாகப்படுத்தி ஊக்குவித்திருந்தார்.’
இதேவேளை கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு கூடுதல் அவதானம் செலுத்தி வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவிற்கு அமைவாக அண்மையில் முல்லைத்தீவு கடல் தொழிலாளர்கள் தாமும் கடலட்டை தொழிலில் ஈடுபட அனுமதி தரவேண்டும் என அமைச்சரிடம் ஆர்வத்துடன் கோரிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் வாவியை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாவியின் இரு பக்கங்களையும் தூர்வாரி அதன் ஊடாக சாலை கடல் பிரதேசத்தில் இருந்து தொடர்ச்சியான நீர் வழிந்தோடும் நிலையை ஏற்படுத்த துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார் .
மேற்படி திட்டத்தின் ஊடாக குறித்த பிரதேசத்தில் வீச்சு வலை மற்றும் கூடுகட்டி றால் பிடிக்கும் சிறுதொழில் முறைகளை இருபத்தி நான்கு மணித்தியாலயம் ஊக்குவிப்பதன் ஊடாக தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படும் வறுமை நிலையை இல்லாது செய்யும் ஏது நிலை உருவாகி கொடுப்பதுவே அமைச்சர் எதிர்பார்ப்பாகும் .
இதேநேரம் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்த புதுமாத்தளன் பிரதான வீதியில் ஊடறுத்துச் செல்லும் களப்பு பகுதியையும் பார்வையிட்டார். குறித்த பிரதேசத்தை ஆழமாக்குவதன் ஊடாக வீச்சு வலைகள், கூட்டு வலைகள் ஊடாக றால் போன்ற சிறு தொழில்களை மேற்கொள்ளும் கடல்தொழிலாளர் வருடந்தோறும் தொடர்ச்சியான தொழில்களை மேற்கொள்ள கூடிய சூழ்நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


