கோழிப் பண்ணையால் தொற்றுநோய்த் தாக்கம்: தீர்வு பெற்றுத் தருமாறு சண்டிலிப்பாய் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!

Monday, November 6th, 2017

எமது கிராத்தில் உள்ள கோழிப் பண்ணையால் தொற்றுநோய்த் தாக்கத்திற்கு உள்ளாகும் அபாயங்கள் எதிர்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இது விடயத்தில் தமக்கு உரிய தீர்வினைப் பெற்றுத் தருமாறும் டக்ளஸ் தேவானந்தாவிடம் சண்டிலிப்பாய் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களின் வேண்டுகோலை அடுத்து சண்டிலிப்பாய் பகுதிக்கு சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இந்த பகுதி மக்களுடன் கலந்துரையாடி அவர்களது பிலச்சனைகளை கேட்டறிந்து கொண்டார்.

அதனடிப்படையில் தமது கிராமத்தில் கோழிப்பண்ணையொன்று இருப்பதாகவும் அங்கிருந்து அகற்றப்படும் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாத காரணத்தினால் தாம் வாழும் சூழலில் பல்வேறுபட்ட சுகாதார சீர்கேடுகளுக்கு தாம் முகம் கொடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் கூட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக குழந்தைகள் ,சிறுவர்கள் தெற்று நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகி வருவதாகவும் இந்த கோழிப்பண்ணையை அகற்றுமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் கோழிப் பண்ணை அகற்றப்படாது உள்ளமையானது தமக்கு மிகுந்த வேதனையை தருவதாகவும் மக்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

இது விடயம் தொடர்பில் துறை சார்ந்தோருடன் கலந்துரையாடி உரிய தீர்வுகளை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு -பாலகிருஸ்ணன் (ஜீவன்)  கட்சியின் வலிதென்மேற்கு நிர்வாகச் செயலாளர் வெலிஜ்ஜோர் அன்ரன் ஜோன்சன் ஆகியோர் உடனிருந்தார்.

Related posts:

பாரதப் பிரதமர் மோடியின் வருகையை தமிழ் தரப்பினர் பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - நாடாளுமன்ற...
தேவைப்படும்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபிப்பார் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
காணாமல் போன உறவுகளை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விருப்பம் தெரிவித...

அவலத்தில் வாழும் மக்களின் துயரம் துடைக்கும் ஆண்டாக புதுவருடம் பிறக்கட்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
பேலியகொட மீன் சந்தையின் புனரமைப்புப் பணிகளை உடன் ஆரம்பிக்கவும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவு !
வேலணை பிரதேச செயலரின் இடமாற்றம் குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!