கொழும்பு துறைமுகத்தினை பார்வையிட்ட இரணைதீவு மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்பு!

Sunday, February 23rd, 2020

கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளை நேரடியாக கண்டு அறிந்து கொண்டமை தமக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளதாக தொரிவித்திருக்கும் இரணைமாதா நகர் கடற்றொழிலாளர்கள், இதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தனர்.

தலைநகர் கொழும்பிற்கான சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டுள்ள இரணைதீவு, இணைமாதா நகர் பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 75 இற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் இன்று(23.02.2020) கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் செய்து துறைமுகத்தின் செயற்பாடுளை அவதானித்தனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவரக்ள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

கடந்த கால யுத்த சூழல் காரணமாக சுமார் 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த இரணைதீவு மக்கள், யுத்தம் நிறைவடைந்த நிலையிலும் மீள்குடியேற்றப்படாத நிலையில் கடந்த 2018 ஆண்டு மே மாதமளவில் தாங்களாகவே தங்களுடைய சொந்த இடங்களுக்கு சென்று மீள்குடியேறியிருந்தனர்.

இருப்பினும் அப்போது அதிகாரத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி – தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்த அரசாங்கத்தினால் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் உருவாகிய புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இரணைதீவு மக்களின் வாழ்வாதாரத்தினை வளப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கான பாரிய கடலட்டை பண்ணை ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனார்.

குறித்த முயற்சி இறுதிக் கட்டத்தினை அடைந்து வருகின்ற நிலையில் தலைநகருக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இரணைதீவு பிரதேச கடற்றொழிலாளர்களை அமைச்சர் அவர்கள் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியதுடன் கொழும்பு துறைமுகத்தினை பார்வையிடுவதற்கான ஏற்பாட்டினையும் செய்து கொடுத்தமை குறிப்பிடத்தகக்கது

Related posts:

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கூட்டம் ஆரம்பம்!
வடக்கு மாகாணம் போதைப்பொருள் கடத்தும் கேந்திரமாக மாறக் காரணம் என்ன? - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் ...
13ஆவதுதிருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்திலிருந்து ஆரம்பிப்பதே தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை...