கொறோனாவினால் பாதிக்கப்படும் சிவாச்சாரியர் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

Saturday, May 22nd, 2021


கொறோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்ற இந்துச் சிவாச்சாரியர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிவாச்சாரியர்களின் தேவைகள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொறோனா வைரஸினால் பாதிககப்படுகின்ற சிவாச்சாரியர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் எதிர்கொள்ளுகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக கௌரவ பிரதமரின் இந்து விவகாரம் தொடர்பான இணைப்பாளர் சிவஸ்ரீ பாபு சர்மா இராமசந்திரக் குருக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், பாதிக்கப்பட்டிருக்கின்ற சிவாச்சாரியர்களுக்கான உணவு நடைமுறை மற்றும் ஆகமக் கடமைகளை மேற்கொள்வதற்கு வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக அவதானம் செலுத்தினார்.

இதன்போது, சிவாச்சாரியர்களுக்கு தேவையான சைவ உணவுகள் ஆச்சார முறைப்படி பரிமாறப்படுவதை உறுதிப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆலோசனை வழங்கப்பட்டது.

அதேவேளை, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தனிமைப்படுத்தல் பராமரிப்பு நிலையத்தில் தற்போது மூன்று சிவாச்சாரியர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி கேதீஸ்வரன், தேவையேற்படின் சிவாச்சாரியர்களுக்கான தனியான தொகுதி ஒன்றினை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பிற்போக்கான சமூக அமைப்பினை மாற்றியமைப்பதற்கான அர்ப்பணிப்பு கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருக்கின்றது
அரசியல் கைதிகளின் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துவிதமான பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் - ஊடக சந்திப...
வலி வடக்கில் விடுவிக்கப்படாது மீதமிருக்கும் காணிகளும் விடுவிக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு...

வளங்களை இனங்கண்டு  கைத்தொழிலை ஊக்குவிக்க வேண்டும்  - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
தற்போதைய அரசியல் சூழலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தீர்வுக்காக பயன்படுத்த வேண்டும் - ...
அமைச்சர் டக்ளஸின் ஆரோக்கியமான கோரிக்கைகளினால் காத்திரமான தீர்மானங்கள் -யாழ். மாவட்ட செயலகத்தில் சம்ப...