கொடிகாமம் – பருத்தித்துறை – காங்கேசன்துறை வரையிலான ரயில் சுற்றுவட்ட சேவை உருவாக்கப்பட வேண்டும் – சபையில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
Saturday, November 25th, 2017
யாழ் குடாநாட்டிற்குள் ஒரு சுற்றுவட்ட சேவையாக இரயில் சேவையினை முன்னெடுக்கும் நோக்கில் கொடிகாமம் – பருத்தித்துறை – காங்கேசன்துறை வரையிலான இரயில் பாதையினை அமைக்க வேண்டிய ஒரு கோரிக்கையினை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம் (25.11.2017) போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் மற்றும் வெளிவிவகாரம், அபிவிருத்திப் பணிப் பொறுப்பு ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில் –
மேலும் குறித்த பாதை அமைப்பில் எவ்விதமான தடைகளும் இருக்கப் போவதில்லை. இடையில் பாலங்கள் கிடையாது. அரச காணிகள். சுமார் 25 கிலோ மீற்றர் வரையிலான தூரம். சமவெளித் தரை. எனவே இவ்விடயம் தொடர்பில் அவதானமெடுத்து, கௌரவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களது காலத்திலேயே இத்திட்டம் சாத்தியமாக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts:
|
|
|


