கெளதாரிமுனையில் ஐம்பது மில்லியன் முதலீட்டில் நவீன இறால் பண்ணை – ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

கெளதாரிமுனை, விநாசியோடை பகுதியில் ஐம்பது மில்லியன் முதலீட்டில் அமையவுள்ள நவீன இறால் பண்ணை திட்டத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.
சுமார் 10 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் வருடம் ஒன்றிற்கு 300 தொன் இறால் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்றும் அதன்மூலம், வருடம் தோறும் சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று மதிபீடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, கௌதாரிமுனை பிரதேசத்தினை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பும், சமூக மேம்பாட்டு வசதிகளும் ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. – 30.09.2022
Related posts:
நேசமிகு தமிழ் பேசும் எமது மக்களுக்கு....
நவீன தொழில் நுட்பங்களை இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் ...
வரவுள்ள தேர்தல்களில் தமிழ் மக்கள் வெற்றிபெறும் தரப்பில் கதாநாயகர்களாக இருப்பது அவசியம் - அமைச்சர் ட...
|
|
முல்லைத்தீவில் தொடரும் மர்மக் காய்ச்சல் தொடர்பில் தடுப்பு ஏற்பாடுகள் அவசியம் - டக்ளஸ் தேவானந்தா சுகா...
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை விரைவில் தரமுயர்த்தப்பட வேண்டும் - அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவ...
தொடர்ந்தும் பதில் பணியாளர்களாக தொடர்வதற்கு ஆவண செய்யுங்கள் - யாழ். தபால் நிலையத்தில் பதில் பணியாளர்க...