கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு விமோசனத்தை பெற்றுத்தராது – உரும்பிராயில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!-

Friday, February 15th, 2019

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படுவதற்கான காலம் உருவாக வேண்டுமானால் மக்கள் மீதான அக்கறையும் தற்துணிவுடன் அதைச் செய்து முடிக்கக் கூடிய ஆற்றலும் உள்ள எமது கரங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதுவே தமிழ் மக்களது தீரா பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தரும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

உரும்பிராய் பகுதியில் நடைபெற்ற கிராமிய உழைப்பாளர் அபிவிருத்தி அமைப்பினருடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தமது சுயநலன்களுக்காக மக்களின் அடிப்படை தேவைகளைக் கூட பெற்றுக் கொடுக்க விருப்பமில்லாதிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான தீர்வுகளை எப்படி பெற்றுத்தருவார்கள்?

இன்று தமது வாழ்கையை முன்னெடுத்து செல்ல முடியாத நிலையில் பல குடும்பங்கள் எமது பிரதேசங்கள் தோறும் இருக்கின்றன. இந்த நிலையில் மத்தியில் ஆட்சியாளர்களுடன் இணைந்து செயற்பட்டுவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தமது அதிகாரங்களை கொண்டு மக்களுக்காக எத்தகைய தீர்வை பெற்றுக்கொடுக்க முடிந்தது? அவர்களிடம் அதிகாரங்கள் இருந்தாலும் அதைக்கொண்டு மக்களுக்கான தேவைப்பாடுகளையோ அன்றி அரசியல் உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற மனோநிலையோ அவர்களிடம் ஒருபோதும் காணப்படவில்லை.

ஆனாலும் தேர்தல் காலங்களில் அவர்கள் கூறும் மாயை நிறைந்த வாக்குறுதிகளில் எமது மக்கள் சிக்கிக் கொள்வதால் அவர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களின் அரசியல் அதிகாரங்களை பெற்றுக்கொள்கின்றனர்.

இந்த செயற்பாடுகளாலேயே அவர்களால் மக்களைத் தொடர்ந்தும்  ஏமாற்ற முடிகின்றது. ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை. மக்கள் தமக்கான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகள் காணப்பட வேண்டும் என்ற மனோதிடத்தை எட்டியுள்ளதை காணமுடிகின்றது.

இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களே இலங்கையில் வறுமையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக காணப்படுவதாக அண்மையில் உலக வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அந்தவகையில் இனிவரும்காலத்தில் மக்கள் மீது அக்கறையும் தற்துணிவுடன் எடுக்கும் விடயங்களை செய்து முடிக்கும் ஆற்றலையும் கொண்டவர்களிடமே தமது அரசியல் அதிகாரங்களை வழங்குவார்கள் என்று தெரிகின்றது. அந்தவகையில் தமிழ் மக்கள் தமக்கான அரசியல் அதிகாரங்களை எமது கரங்களுக்கு வழங்குவார்களேயானால் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வை மிகவிரைவில் பெற்றுத்தருவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

வீட்டுத் திட்டங்களில் பயனாளிகளுக்கு இலகுவான நடைமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா
வடக்கில் துயரங்கள் தொடர்வதற்கு வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவர்களே காரணம் - நாடாளுமன்றில் செயலாளர் ந...
மழை நீர் சேமிக்க பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்த...

எமக்கு கிடைத்த சபைகளை வினைத்திறன் மிக்க சபைகளாக வழிநடத்தி செல்வோம் - ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்...
எமது மக்கள் வன விலங்குகளுடன் போராடும் நிலை வரக்காரணம் என்ன?  - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
யாழ் பல்கலை முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்கள் சுற்றறிக்கையின் பிரகாரமா நிரப்பப்படுகின்றன.– நாடாளுமன...