குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுதாருங்கள்: டக்ளஸ் எம்.பியிடம் ஒட்டிசுட்டான் கரடிப்புலவு மக்கள் கோரிக்கை!
Sunday, October 20th, 2019
எமது பிரதேசத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர் தீர்வுகள் இதுவரை பெற்றுத்தரப்படாமையால் நாம் நீண்டகாலமாக குடி நீர் மட்டுமல்லாது ஏனைய தேவைகளுக்குமான நீரை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம்
ஒட்டிசுட்டான் கரடிப்புலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒட்டிசுட்டான் கரடிப்புலவு பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது அப்பகுதியின் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போதே குறித்தபகுதி மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.
மேலும் நீண்டகால யுத்தத்தை எதிர்கொண்டுவந்த எமது பகுதி மக்கள் தற்போதுதான் மீண்டுவருகின்றனர்.
எமது தேவைகளை இதுவரை எந்தவொரு தரப்பினரும் திரும்பிப் பார்க்கவில்லை. இதனால் எமது பகுதுயில் அடிப்படை தேவைகள் எதுவும் கிடையாதுள்ளது.
எமது மக்கள் குடிநீர் மட்டுமல்லாது வீட்டுத்திட்டம் மலசல கூடம் வீதி புனரமைப்புகளிலும் புறக்கணிக்கப்பட்ட நிலை காணப்படுகின்றது.
அதனால் பலதசாப்த காலமாக இங்கு நாம் வாழ்ந்து வந்தாலும் எதுவித வசதிகளும் இன்றியே வாழ்ந்துவருகின்றோம்.
எமது இந்த பிரச்சினைகளை தங்களால் மட்டுமே தீர்த்துவைக்க முடியும் என தெரிவித்த குறித்த பகுதி மக்கள் தாம் நீண்டகாலமாக கூட்டமைப்பினரின் சுயனலத்தில் வீழ்ந்து கிடந்ததாகவும் தற்போது அதிலிருந்து தாம் தற்போது விடுபட்டுள்ளதாகவு தெரிவித்த அவர்கள் இனிவரும் காலத்தில் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆரய்ந்தறிந்தறிந்துகொண்ட செயலாளர் நாயகம் காலக்கிரமத்தில் அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


