கிளி. மலையாளபுர புதிய பாரதி விளையாட்டுக்கழகத்திற்கான கரப்பந்தாட்ட மைதானத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !.

Tuesday, March 2nd, 2021

கிளிநொச்சி மலையாளபுரத்தில் புதிய பாரதி விளையாட்டுக்கழகத்திற்கான மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்தார்.

இன்று 02.03.2021 கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவுள்ளார்.

அதன் ஒரு கட்டமாக கரைச்சி பிரதேச சபையில் அமைந்துள்ள புதிய பாரதி விளையாட்டு மைதானத்தில் அமையப்பெறவுள்ள கரப்பந்தாட்ட மைதானத்திற்கான அடிக்கல்லை அமைச்சர் நாட்டிவைத்தார்.

கிராமிய மற்றும் பாடசாலை. விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் வேலைத்திட்டத்திற்கு அமைய நாடுபூராகவும் உள்ள 332 பிரதேச செயலகங்களில் உள்ள கிராமங்களில் கிராமிய விளையாட்டு  மைதானம் அமைத்தல் நிழ்ச்சித் திட்டத்திற்கு அமைய இந்நிகழ்வை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழக இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரின் இணைப்பாளர்கள் தவநாதன், ருஷாங்கன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கூட்டமைப்பினரின் திட்டமிடப்ப டாத தீர்மானங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுவருகினறனர்  - வவுனியாவில் டக்ளஸ்...
கிளிநொச்சி விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை இலவசமாக வழங்க ஏற...
தேர்தல் வாக்குகளுக்காவே சக தமிழ் கட்சிகள் ஐ.நாவுக்கு அறிக்கை அனுப்புகின்றனர் – ஈ.பி.டி.பி நிலைப்பாட்...