கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி நிலைய தொழிலாளர்கள் நிரந்தர நியமனத்துக்கு வகை செய்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

கிளிநொச்சி இரணைமடு பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தில் பணியாற்றும் 25 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமது நிரந்தர நியமனத்துக்கு வகை செய்து உதவுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இன்றையதினம் கிளிநொச்சிக்கு வருகைதந்துள்ள அமைச்சரை குறித்த பிராந்திய அபிவிருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் கடமையாற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்ததுடன் தமக்கு நிரந்தர நியமனத்தினை பெற்றுத் தருமாறு வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.
குறிப்பாக கடந்த 2014 இல் அமைய ஊழியர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமக்கு பத்து ஆண்டுகள் ஆகியும் நிரந்தர நியமனத்தை பெற முடியாது இருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்த அவர்கள் தமக்கு நாளாந்த வேதனமாக அண்மைக்காலத்தில் இருந்து 1300 ரூபா வழங்கப்படுவதாகவும் தற்போதைய வாழ்க்கை செலவினத்தில் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் தாம் வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
குறித்த கோரிக்கையிழன் நியாயத்தன்மையை உணர்ந்த அமைசர் இதுதொடர்பாக துறைசார் அமைச்சருடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சியில் மட்டுமல்லாது யாழ்ப்பாணம் உட்பட நாடளாவிய ரீதியில் இவ்வாறான ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தர நியமனம் தொடர்பான எதிர்பார்ப்புடன் இருக்கின்ற நிலையில் சாத்தியமான வழிவகைகள் தொடர்பாக ஆராயுமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும், குறித்த நியமனம் தொடர்பாக அரசாங்கம் தற்போது வரையில் கொள்கையளவிலான தீர்மானங்கள் எதனையும் மேற்கொள்ளாத நிலையில் பொறுமையாக இருக்குமாறும் தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|