கிளிநொச்சி மாவட்ட தடுப்பூசி வழங்கல் முன்னேற்றம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Tuesday, August 3rd, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா Zoom கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

மாவட்டச் செயலாளர் சார்பாக, மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகனன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பிரதேச செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சரவணன் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்கென 50 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவை உரிய முறையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறதா என இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது, மேலதிகமாக தடுப்பூசிகள் தேவைப்படும் என்று, பிராந்திய சுகாதார சேவைகள் கிளிநொச்சி மாவட்ட பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரிவித்திருந்தார்..

இதனையடுத்து, மேலதிகமாகத் தேவைப்படும் சுமார் 15 ஆயிரம் தடுப்பூசிகளையும் கிளிநொச்சி மாவட்டத்துக்கு பெற்றுத்தர ஏற்பாடு செய்து தருமாறு, அமைச்சரின் இணைப்பாளரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான தவநாதன் வேண்டுகோள் விடுத்திருந்தார்..

இதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்துதருவதாக உறுயளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் முட்கொம்பன் மற்றும் இயக்கச்சி பகுதி மக்களுக்கு இன்றையதினம் (03-08-2021)தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகள் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான தவநாதன் அவர்களிடம், பூநகரி பிரதேச அமைப்பாளர் இராசலிங்கம் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை உறுப்பினர் வசந்தரூபன் ஆகியோர் விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்ந்து, நாளையதினம் கோணாவில் மற்றும் மலையாளபுரம் பகுதி மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் தவநாதனின் வேண்டுகோளுக்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நிர்வாகத்துறை முடக்கப்பட்டால் வளங்களை தொல்பொருள் துறை ஆக்கிரமிக்கும் ஆபத்து – எச்சரிக்கிறார் டக்ளஸ் ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் வவுனியா பல்கலைக்கழகம் அங்குரார்ப்பனம் – அமைச்சர்களான டக்ளஸ் தேவ...
சக மதங்களை பாதிக்காத வகையில் ஒவ்வொருவருடைய மத உணர்வுகளும் பாதுகாக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வ...