கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்து முகாம்!
Monday, August 24th, 2020
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கருத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்து முகாம் ஒன்று கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற கருப் பொருளுடன் இன்று ஆரம்பமாகியுள்ள இந்த இலவச மருத்துவ முகாம் இன்றும் நாளையும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மருத்துவ முகாம் ஊடாக கண் பார்வை, சிறுநீரக கோளாறுகளுக்கான பரிசோதனைகள் மற்றும் சத்திர சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளையும் பொது மக்கள் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.
குறித்த வேலைத் திட்டம் வடக்கு கிழக்கு பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிராம ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிங்களப் பெயர்களிலான கடன்களை உணர்ந்து தமிழ் மக்களால் பயன்பெற முடியவில்லை.
எல்லைதாண்டிய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வருடன் விரைவில் பேச்சு – அமைச்சர் டக்ளஸ் த...
சர்வதேச கடல் மற்றும் ஆழ்கடல் கடற்றொழிலை மேலும் ஊக்குவிப்பதற்கு தேசிய நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படும் – ...
|
|
|





