கில்மிஷாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!

Tuesday, December 19th, 2023

சரிகமப நிகழ்ச்சியில் வெற்றியீட்டி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள கில்மிஷாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவாானந்தா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை அமைச்சரவை நிறைவடைந்த பின்னர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைத்தொலைபேசி ஊடாக கில்மிஷாவை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், நாட்டிற்கு வருகை தந்ததும் நேரில் சந்திப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.

குறித்த போட்டியில் கலந்து கொள்வதற்காக, கில்மிஷா இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்ற போது, எதிர்பாராத விதமாக பலாலி விமான நிலையத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த கில்மிஷாவின் பெற்றோர் அமைச்சருக்கு தமது பயணத்தின் நோக்கத்தினை தெரிவித்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கில்மிஷாவை வாழ்த்தி அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


தும்பளை தாமரை மலர்கள் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!
வடக்கில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியுமா? - ஜன...
வழமைக்கு திரும்பியது பாதை போக்குவரத்து ஊர்காவற்துறை – காரை மக்கள் அமைச்சர் தேவானந்தாவிற்கு நன்றி தெ...