கிராமிய பாடசாலைகளின் விளையாட்டு துறையை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சியில் விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!
Friday, April 19th, 2024கிராமிய பாடசாலைகளின் விளையாட்டு துறையை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சினால் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளையாட்டு உபகரணங்களை குறித்த பாடசாலைகளுக்கு வழங்க வைத்தார் .
குத்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர் நளாயினி, மேலதிக அரச அதிபர் முரளிதரன் (காணி), மாவட்டத்தின் கல்விப் பணிப்பாளர் , பிரதேச செயலாளர்கள் கல்விசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிலக்குடியிருப்பு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்- டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
நாம் தேர்தலில் போட்டியிடுவது ஆளவேண்டும் என்ற ஆசையிலல்ல: மக்கள் உரிமையோடு வாழவேண்டும் என்பதற்காகவே - ...
யாழ். மருத்துவ பீடம் மற்றும் வடக்கு கல்வி சமூகத்தின் எதிர்பார்ப்புக்களுக்கு விரைவில் தீர்வு - அமைச்ச...
|
|
|


