கிடைத்த சந்தர்ப்பங்கள்அனைத்தையும் மக்களது விடியலுக்கானதாக உருவாக்கி வெற்றிகண்டிருக்கின்றோம் – முல்லை. தியோநகரில் டக்ளஸ் தேவானந்தா !

Wednesday, November 9th, 2016

மக்களது வறுமையையும் அவர்களது வாழ்விலையும் சொந்த அரசியல் சுகபோகங்களுக்காக பயன்படுத்தி அநாகரீக அரசியல் வியாபாராம் செய்பவர்கள் நாம்  அல்ல. நாம் மக்களின் வாழ்வியலையும் அவர்களது வாழ்வியல் உரிமைகளையும் எமக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்தி முடியுமானளவு பெற்றுக்கொடுப்பதற்காகவே அரசியல் களத்தில் பயணித்து வருகிறோம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

02 (2)

முல்லைத்தீவு மாவட்ட மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக  நேற்றையதினம்  குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா திலாவத்தை தியோநகர் மக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்-

ஆயுதப்போராட்டத்தினூடாக எமது மக்களுக்கான நிரந்தர தீர்வுகள் எதனையும் பெற்றுக்கொள்ளமுடியாதென 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்துடன் நாம் தீர்மானித்துக்கொண்டு உரிமை போராட்டத்தின் மாற்றீடாக நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் வழிமுறைகளுக்கூடாகவே மக்களது பிரச்சினைகளுகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம்.  அன்று நாம் எடுத்தக்கொண்ட ஜனநாயக அரசியல் நீரோட்டத்தின்மூலம் எமது மக்களது தேடலுக்கான தீர்வுகளை எமக்கு கிடைக்கப்பெறும் அரசியல் பலத்தின் மூலம் முடியுமானவரையில் மக்களுக்கு பெற்றுக்கொடுத்து வருவதுடன் அதனூடாக அதிகளவான வெற்றிகளையும் கண்டுள்ளோம்.

01

உரிமைகளுக்காக நாம் இரத்தம் சிந்திப் போராடிய போதும். இனியாவது எமது இனத்தின் நிரந்தரமான வாழ்வியலுக்கு அடித்தளமிடக்கூடிய யதார்த்தபூர்வமான வழிமுறைகளைக் கையாண்டு மக்களது நலன்சார்ந்த தேடலுக்குரியவர்களை தமிழ் மக்கள் இனங்கண்டு தமது அரசியல் தலைமைகளாக அதிகாரத்தக்கு கொண்டுவர முயற்சிக்கவேண்டும்.

11

அவ்வாறானதொரு அரசியல் பலத்தை தமிழ் மக்கள் எமக்கு தருவீர்களானால் நிச்சயமாக உங்களது வாழ்வாதாரத்தை மட்டுமல்லாது தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையுடன் கூடிய ஒரு ஒளிமயமான எதிர்காலத்தையும் உருவாக்கித் தருவதற்கான சூழ்நிலையையும் ஏற்படுத்தித் தருவேன் என டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

இதனிடையே குறித்த பகுதி மக்கள் தமது அடிப்படை தேவைகளான வீதி புனரமைபு தமது பகுதி விளையாட்டுக் கழகத்திற்கு மைதானம், மக்களுக்கான சுதொழில் வாழ்வாதார உதவி, கடற்றொழில் மேம்பாட்டுக்கான உதவி போன்றவற்றை பெற்றுத்தருமாறு குறித்த பகுதி மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

03

Related posts: