காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்போது கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு!

Friday, December 17th, 2021

காணிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றபோது கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பூநகரிப் பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான 196 ஏக்கர் காணிகளை விவசாயப் பண்ணை அமைப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்றினால் விண்ணப்பித்தமை தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த விடயம் இன்றைய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்  ஆராயப்பட்ட நிலையில், மேற்குறித்த விடயத்தினை தெரிவித்த இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Related posts:

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்ற வகையில் வடக்கு முதல்வர் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மு...
காணாமல் போனோர் விவகாரம் - மூன்று பரிகாரங்களை ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளேன் – அமை...
வடக்கின் பொருளாதாரத்திற்கான சர்வதேச வாயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. - அமைச்சர் டக்ளஸ் மகிழ்ச்சி!