காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர்களான ரோஹித அபயகுணவர்த்தன மற்றும் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று கள ஆய்வு!

Wednesday, December 23rd, 2020

காங்கேசன்துறை துறைமுகப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கப்பல்துறை அமைச்சர் றோஹித அபேகுணவர்த்தன ஆகியோர், குறித்த துறைமுகத்தில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.

யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபய குணவர்த்தன, கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜெயந்த சமரவீர, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு ஆய்வொன்றை மேற்கொண்டனர்.

இதன்போது காங்கேசன் துறையில் அமைந்துள்ள இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின் அலுவலகத்தி்ல், காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதன் ஊடாக மேற்கொள்ளக் கூடிய அபிவிருத்திப் திட்டங்கள் தொடர்பாக அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, றோஹித அபேகுணவர்த்தன மற்றும் அதிகாரிகளுக்கு துறைமுக அதிகாரசபையின் அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது

இதன்போது கருத்து தெரிவித்த கப்பற்துறை அமைச்சர் – துறைமுகத்தின் நிர்மாணப் பணிகள் இந்திய நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் எனவும் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக நடவடிக்கைகளை காங்கேசன்துறை துறைமுகத்தினூடாக மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறதாகவும் தெரிவித்த கப்பற்துறை அமைச்சர் இதனூடாகயாழ்ப்பாணத்தில் பல தொழில் வாய்ப்புகளையும் உருவாக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வர்த்தக கப்பல்துறை அமைச்சர் றோஹித அபேகுணவர்த்தன ஆகியோரினால் காங்கேசன்துறை ஐயனார் ஆலயத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டி வைககப்பட்டது.

கப்பல்துறை அமைச்சின் இரண்டு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த ஆலயம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் -மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம் வாருங்கள்-நாடாளுமன்றில் அமைச்சர் தேவ...
கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வுகாண சாத்தியமான வழிமுறைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் ...
கட்சியின் யழ் மாவட்ட மற்றும் முக்கியஸ்தர்களுடன் செயலாளர் நாயகம் விசேட கலந்துரையாடல்!

கடற்றொழிலாளரை மையப்படுத்திய 'ஓடக்கரை' மாதாந்த சஞ்சிகையை வெளியிட்டு வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய எழுதாரகை படகை அப்புறப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
'ஈ.பி.டி.பி.யின் புதுக்குடியிருப்பு இளைஞர் அணி' உருவாக்கம் - நிர்வாகக் கட்டமைப்பும் செயலாளர் நாயகம் ...