கறுப்பு ஜூலை நிகழ்ந்திருக்கா விட்டால் நாடு பெரும் அபிவிருத்தி அடைந்திருக்கும்- நாடாளு மன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, August 5th, 2017

1977 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனா அவர்களின் அரசு நாட்டின் சமூக, பொருளாதார விடயங்களில் பாரிய மாற்றங்களுக்கு இடமளித்திருந்தது.அது பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவு பங்களிப்பைச் செய்துள்ளதுடன், உச்சளவில் முன்னேற்றங்களும் ஏற்பட்டன. 1983 இல் துர்ப்பாக்கிய கறுப்பு ஜூலை நிகழ்வுகள் இடம்பெறாதிருந்திருக்குமாயின் நாட்டினை பெரும் அபிவிருத்தியை நோக்கி நகர்த்திச் சென்றிருக்க முடிந்திருக்கும்.

துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மஹாபொல மாணவர் நிதியம், (கம்உதாவ) கிராம எழுச்சித் திட்டம், (ஜனசவிய) வாழ்வாதார நிதியம் ஆகிய தேசிய திட்டங்கள் அன்றைய அரசினால் ஏற்படுத்தப்பட்டன.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை நோக்கியதாக மாவட்ட அபிவிருத்திச் சபை முறைமையும், இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினூடாக மாகாண சபைகள் முறைமையும் ஏற்படுத்தப்பட்டன.

இத்தனை செயற்றிட்டங்களுக்கு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன மற்றும் ஜனாதிபதி பிரேமதாச ஆகியோருக்கு நிழல்போல் இருந்து கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் செயற்பட்டு வந்தார்.

அவ்வப்போது அரசாங்கங்களால் எதிர்கொள்ளப்பட்ட அரசியல் நெருக்கடிகள் பலவற்றுக்கும் முகங்கொடுத்து அவற்றையெல்லாம் துணிச்சலுடன் எதிர்கொண்டு இன்றைய இந்த நிலைவரை உயர்துள்ளார் என்றே ரணில் விக்கரமசிங்க அவர்களை நோக்க முடிகின்றது.

1977 ஆம் ஆண்டில் இளம் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியலில் களம் புகுந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதி வெளிவிவகார அமைச்சராக பதவியேற்று திறம்பட செயற்பட்டதனால் ஜெயவர்த்தன அரசு பின்னர் அவருக்கு இளைஞர் சேவைகள், கல்வி விவகார அமைச்சுப் பொறுப்பைக் கொடுத்தது. அந்த காலகட்டத்தில் பலரது பாராட்டுதல்களையும் அவர் பெற்றிருந்தார்.

ஆசிரியர் சேவைக்கு ஆட்களைத் திரட்டுவதற்காக ஏற்கெனவே இருந்த முறையை மாற்றினார். போட்டிப் பரீட்சையின் ஊடாக ஆட்சேர்ப்பு செய்து சிறந்த ஆசிரியர் சமுதாயத்தை உருவாக்கிய பெருமை அவரைச் சார்ந்ததாகும் என நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் அரசியல் வாழ்வின் 40 வருடங்களை நிறைவு செய்தது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு ஆற்றியபோதே தெரிவித்துள்ளார்.

Related posts:

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமேயன்றி குறைக்கப்படக் கூடாது- டக்ளஸ் தேவானந்தா
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பதவிகளையும் தாண்டிய பொறுப்புக்களையும் சுமக்க வேண்டும் - அமைச்சர் டக்...
அபிவிருத்தி திட்டங்களுக்கான அங்குரார்பண நிகழ்வின் கிளிநொச்சி மாவட்ட ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக...

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் முடக்கப்பட்டுள்ள பயிர்செய்கை நிலங்ககளை விடுவி...
நடந்தவை நடந்ததாகே இருக்கட்டும். நடக்கப் போவது நல்லதாக அமையட்டும்- முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தே...
சட்டவிரோத செயற்பாடுகளை நியாயப்படுத்தும் மலினமான அரசியலை கூட்டமைப்பு நிறுத்த வேண்டும் - அமைச்சர் டக்...