கரைதுரைப்பற்று பிரதேச சபையை நகர சபையாகத் தரமுயர்த்தி மக்களின் தேவைகளுக்கு தீர்வு காணப்படும் – முல்லைத்தீவில் டக்ளஸ் எம்.பி! 

Sunday, February 4th, 2018

முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச சபையை நகரசபையாக மாற்றி அதனூடாக இப்பகுதி மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதே எமது எதிர்காலத் திட்டமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மடாவட்டத்திற்கு இன்றையதினம் (4) விஜயம் மேற்கொண்டுள்ள செயலாளர் நாயகம் மாமூலை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பரப்புரைக் கூட்டத்தில்  உரையாற்றுகையிலுயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு – கிழக்கு மகாகாணங்களில் நாம் 40 சபைகளில் வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். எமது மக்களின் ஆணையைப் பெற்று அந்த ஆணைக்கு ஊடாக மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

குறிப்பாக யுத்தத்தால் அதிகளவில் அழிவுகளைச் சந்தித்த மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படும் நிலையில் இந்த மாவட்டத்தை மீளவும் கட்டியெழுப்பி மக்களை இயல்பு வாழ்வுக்கு கொண்டுவரவேண்டும். அதற்கு கரைதுரைப்பற்று பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்தி அந்த வாய்ப்பினூடக இந்த பிரதேச மக்களின் தேவைகளை இனங்கண்டு தீர்வுகள் காணப்படவேண்டும்.

அந்தவகையில் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைக் காணக்கூடிய ஆற்றலும் அக்கறையும் தற்துணிவும் எம்மிடம் உள்ளது. அதனை நம்பி மக்கள் எமது வீணைச் சின்னத்திற்கு ஆணையைத் தரும் பட்சத்தில் நிச்சயம் நாம் உங்கள் பகுதியை மாற்றியமைப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

தூரநோக்கற்ற தலைமைகளினாலேயே வடக்கில் கல்வி வீழ்ச்சியடைந்துள்ளது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!
வன்னி மக்கள் ஓரளவேனும் நம்பிக்கைக்கு உரியவர்களை இனங்கண்டுள்ளனர் – ஓர்ஆசனத்தை வைத்தே வன்னி மக்களின் த...
யாழ்ப்பாணத்தில் உள்ள தீவுக்கூட்டங்கள் வழமை போன்று மாவட்ட அதிகார சபைக்குட்பட்டே நிர்வகிக்கப்படும் - அ...

உள்ளுராட்சி மன்றங்கள் தரமுயர்ந்தது! எமது கோரிக்கை நிறைவேறியது!! வடக்கில் 3000பேருக்கு அரச வேலைவாப்பு...
தேர்தல் வாக்குகளுக்காவே சக தமிழ் கட்சிகள் ஐ.நாவுக்கு அறிக்கை அனுப்புகின்றனர் – ஈ.பி.டி.பி நிலைப்பாட்...
உயர்தரமாக தரமுயர்ந்தது ஊர்காவற்றுறை புனித மரியாள் றோ.க மகளிர் பாடசாலை – பாடசாலை சமூகம் அமைச்சர் டக்ள...