கடல் உணவு உற்பத்தியின் கேந்திர நிலையமாக தீவகப் பகுதி மாற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

கடல் உணவு உற்பத்தி சார் தொழில் துறைகளை தீவகப் பகுதியில் கட்டியெழுப்பி அதனூடாக கடலுணவு உற்பத்தியின் கேந்திர நிலையமாக தீவகப் பகுதி மாற்றியமைக்கப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் காரைநகர் சீனோர் நிறுவனத்திற்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அத்துறைசார் பொதுமக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் –
தற்போது எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள கடற்றொழில் மற்றும் நீதியல் வள அமைச்சானது தேசிய ரீதியிலானதாக இருந்தாலும் கடற்றொழிலில் முக்கிய பங்கை வகிக்கும் வடபகுதியிலும் அதனூடாக பல திட்டங்களை எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
அந்தவகையில் தீவகப் பிரதேசத்தில் கடல் வளத்தை கொண்டு பல்வேறுபட்ட தொழில் துறைகளை மையப்படுத்திய விஷேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்பிரகாரம் காரைநகர் சீனோர் நிறுவனத்தை மையப்படுத்தியதாக இத்திட்டத்தை முன்னெடுக்கவள்ளதுடன் இப்பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம்,ஐஸ் தொழிற்சாலை,படகு கட்டுமாணம், போக்குவரத்துக்கான இறங்குதுறை மீளமைத்தல், நேரடி மீன் விற்பனைக்கான சந்தை வசதி உள்ளிட்ட துறைகளை ஒன்றிணைத்து கட்டப்படவுள்ளது. இதனூடாக தீவகப் பகுதியை ஒரு கடலுணவு உற்பத்தியின் கெந்திர நிலையமாகவும் உருவாக்கி கொள்ள முடியும்
அத்துடன் தீவக பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பக்களை உருவாக்கி கொடுப்பதுடன் சுயதொழில் முயற்சிகளுக்கம் முதலிட்டாளர்களுக்கும் வாய்ப்பளிக்கப் படவுள்ளது. அத்துடன் வெளியூருக்கான மீன் ஏற்றுமதிக்கான வாய்ப்பும் இதனூடாக ஏற்படுத்திக் கோள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|