கடலட்டை பண்ணை அமைக்க அனுமதி வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கடற்றொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை!
Wednesday, August 17th, 2022
கடலட்டை பண்ணை அமைத்து தொழிலில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ள யாகப்பர் கடற்றொழிலாளர் சங்கம், நாச்சிக்குடா மத்தி கடற்றொழிலாளர் சங்கம், நல்லாயன் கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் செபஸ்தியார்புரம் கடற்றொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தேவையான அனுமதிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்ட கடற்றொழில் அமைச்சர் கடலட்டைப் பண்ணைக்கான விருப்பம் தெரிவித்தோர் குறித்த தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
Related posts:
முன்னாள் போராளிகளின் கடன் இரத்தாகும் : டக்ளஸ் எம்.பி.யின் கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்...
மறப்போம் மன்னிப்போம் என்றால் சட்டம் ஒழுங்கு எதற்கு? – டக்ளஸ் எம்பி கேள்வி!
புலிகளின் உறுப்பினர்களும் எமது குழந்தைகள் என்பதை மறக்க முடியாது - திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந...
|
|
|


