கடற்றொழில்சார் மக்களின் வாழ்வியலை பாதுகாத்து வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு – பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்த்துவைப்பதற்கும் நடவக்கை என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, February 27th, 2022

கொழும்பு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தொடர்பாக ஆராயும் நோக்கில் கொழும்பு மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

தேசிய கிராமிய கடற்றொழிலாளர் சமேளனத்தின் செயற்பாடுகளை வலுப்படுத்தி நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கான சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவிற்கு அமைய மாவட்ட ரீதியாக கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களின் கலந்துரையாடலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலாவது கலந்துரையாடல் கொழும்பு மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களுடனான்  இன்று நடைபெற்றது

இதன்போது கடற்றொழில்சார் மக்களின் வாழ்வியலை பாதுகாத்து வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்ற நிலையில், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முன்னுரிமை அடிப்படையில் அந்தந்தப் பிரதேசங்களுக்கு வருகைதந்து தீர்த்து வைக்கப்படும் – கொழும்பு மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இரத்தப் பலிகளை சுமந்து நடந்த மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றுவோம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்த...
குற்றச்சாட்டுகளை திசைதிருப்புவதில் முன்னின்று உழைத்தவர்களை காணாமற்போனோர் அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்த...
தேசிய பொங்கல் விழா மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் நல்லை ஆதீன முதல்வருடன் அமைச்சர் டக்ளஸ...