கடற்றொழிலாளர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு சாத்தியமான நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Sunday, November 20th, 2022


………
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னார் நடுக்குடா பிரதேச கடற்றொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களை கேட்டறிந்தார்.

குறிப்பாக, இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோதச் தொழில் நடவடிக்கைகள், மண்ணெண்ணை விலை அதிகரிப்பிற்கான நிவாரணம் போன்ற தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாகவும் இல்மனைட் அகழ்வினை தடுத்து நிறுத்துதல் போன்ற அடிப்படை பிரச்சனைகளும் ஜனாதிபதியின் கவனத்திற்கு முன்வைக்கப்பட்டது.

இதன்போது, கடற்றொழிலாளர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு சாத்தியமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்.

அதேவேளை, தேவையானளவு மண்ணெண்ணை தொடர்ச்சியாக கிடைப்பது முதலில் உறுதிப்படுத்தப்படும் எனவும், எதிர்காலத்தில் நிவாரணம் தொடர்பாக பரிசீலிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

அதேபோன்று, ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபருக்கு ஜனாதிபதி தெரிவித்தார். – 20.11.2022

Related posts:


நித்திய உறக்கத்தில் ஆழ்ந்தவருக்கு ஆழ்மன அஞ்சலி - ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் இழப்புச் ...
தொடர்ந்தும் பதில் பணியாளர்களாக தொடர்வதற்கு ஆவண செய்யுங்கள் - யாழ். தபால் நிலையத்தில் பதில் பணியாளர்க...
உழைப்பவர் வாழ்வு விடியவும், சகலரும் சமவுரிமை பெற்று நிமிரவும் உறுதியுடன் உழைப்போம் – மே தின வாழ்த்து...