கடனுக்கு கடன் பரிகாரமாகாது –  நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, June 8th, 2018

நுண் கடன் சுமைகளிலிருந்து எமது மக்கள் விடுபடுவதற்கு அரச இலகுக் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்துவது என்பது அதற்கு ஒருபோதும் உரிய தீர்வாகாது. எமது மக்களை தற்போதுள்ள கடன் சுமையிலிருந்து மீட்க என இன்னுமொரு கடன் திட்டத்தினை அறிமுகம் செய்வதானது எமது மக்களை மீண்டும் படுகுழியில் தள்ளிவிடும் செயலாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றையதினம் நடைபெற்ற நாட்டிலுள்ள நிதி நிறுவனங்கள் தொடர்பாக நிலவுகின்ற பிரச்சினைகள் பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில் –

எனவே, முதலில் மேற்படி நுண் கடன் நிதி நிறுவனங்கள் குறித்து உடனடி ஆய்வுகளை மேற்கொண்டு, நியாமற்ற வட்டி வீதங்களை ஒதுக்கிடவும், முறையற்ற வகையிலான கடன்கள் வழங்கப்பட்டிருப்பின் அவற்றை இரத்துச் செய்திடவும், அவரவர் பெற்ற கடன்களை அவரவர் வசதிக்கேற்ப தவணை முறையில் திருப்பிச் செலுத்துவதற்கு ஒரு கால அவகாசமும் வழங்கிட முன்வர வேண்டும். மேற்படி கடன்களில் பல வலுக்கட்டாயமாக எமது மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டிருப்பதால் இத்தகைய ஏற்பாடுகள் அவசியமாகும்.

அதேநேரம், எமது பகுதிகள் கடந்த காலங்களில் அடைந்துள்ள பாதிப்புகளையும், எமது மக்களின் பொருளாதார வீழ்ச்சி நிலைமைகளையும் கருத்தில் கொண்டு, அரசாங்கம் புனர்வாழ்வு அதிகார சபையின் ஊடாக மேற்படி கடன் தொகையை மீளச் செலுத்துவதற்கு ஒரு விசேட ஏற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும்.

அந்த வகையில் எமது மக்கள் மீது வலியப் புகுத்தப்பட்டுள்ள மேற்படி கடன் சுமைகளிலிருந்து எமது மக்கள் மீளுகின்ற நிலையில், எமது மக்களது எதிர்கால வாழ்வு கருதிய வாழ்வாதாரங்களை மேற்கொள்வதற்கு அரசு குறிப்பிடுகின்ற அரச இலகுக் கடன் முறைமைகளை வழங்குவது ஆரோக்கியமாக அமையும் என்பதைத் தெரிவித்து, எனது இந்த கருத்துக்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Untitled-1 copy

Related posts:


மக்கள் செலுத்துகின்ற வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் மக்களின் தேவைகளைப் பூ...
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அனைத்து முயற்சிகளுக்கும் பூரண ஒத்துழைப்பும் வழங்கப்படும் – திருமலை...
நாடு மீண்டும் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள சில கவனக்குறைவுகளே காரணம் - கட்டுப்படுத்த அரசாங்கம் தீவ...