கங்காராம விகாராதிபதியை சந்தித்தார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, October 30th, 2022


…..
கங்காராம விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்சஜி தேரரை சந்தித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு, இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ள கொரிய முதலீட்டாளர்கள் விகாராதிபதியினால் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முயற்சிகளை எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளிநாட்டு தனியார் முதலீட்டாளர்களும், நவீன தொழில்நுட்ப அனுபவங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் பிரஸ்தாபித்தார்.

அத்தடன், இலங்கையின் கடற்றொழில் சார் அபிவிருத்திக்கு ஒத்துழைக்க முன்வந்துள்ள கொரிய முதலீட்டாளர்களின் ஆர்வத்தினையும் வரவேற்றார். – 30.10.2022

Related posts:


பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் - நாடாளுமன...
முருகன் விளையாட்டுக்கழக கிரிக்கெற் தொடர் இறுதிப் போட்டி:வெற்றிக் கிண்ணம் வழங்கினார் டக்ளஸ் தேவானந்தா
தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு : தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் பிரச்சினைகள் வேறு – நாடாளுமன்றில் ச...