எமது மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எமது வலுவான நிலைப்பாடு – நெடுந்தீவில் டக்ளஸ் எம்.பி!

Friday, February 2nd, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வரலாற்றுத் தடத்தை இந்த நெடுந்தீவு மண்ணிலிருந்தே நாம் ஆரம்பித்து இற்றைவரையில் மக்களுக்கான பெரும் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு இரண்டு நாள் விஜயமாக நெடுந்தீவுக்கு சென்றுள்ள டக்ளஸ் தேவானந்தா தேவா அரங்கில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தீவகப் பகுதியில் குறிப்பாக நெடுந்தீவுக்கும் எமக்கும் நெருங்கியதொரு உறவு உள்ளது. அது என்னவென்றால் 1991 ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று இந்த மண்ணிலே  நாம் காலடியெடுத்துவைத்து எமது மக்களுக்கான பணிகளுடன் கட்சி ரீதியிலான செயற்பாடுகளையும் ஆரம்பித்திருந்தோம்.

அந்த வகையில் 3 தசாப்த காலத்திற்கு மேலான உறவும் நட்பும் இந்த மண்ணோடும் மக்களோடும் பின்னிப் பிணைந்திருக்கின்றது. இந்த மண்ணிலே நாம் பல்வேறுபட்ட மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் சாதித்துக்காட்டியுள்ளோம்.

அவற்றில் குறிப்பாக 24 மணிநேர மின்சாரம், குடிநீர், போக்குவரத்து மற்றும் உட்கட்டுமாணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை நாம் வழங்கி இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளோம்.

இந்த இடத்தில் ஒரு விடயத்தை திட்டவட்டமாகத் தெரிவிக்க விரும்புகின்றேன். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பெற்றுத் தந்ததைப்போன்று வேறெந்தக் கட்சிகளும் மக்களுக்கான சேவைகளை செய்ததும் கிடையாது செய்யப்போவதும் கிடையாது என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றேன்.

நாம் மக்களுக்கு சேவையாற்றும்போது எவ்விதமான எதிர்பார்ப்புக்களையோ பிரதியுபகாரங்களையோ எதிர்பார்த்து செய்பவர்கள் அல்லர். மாறாக எமது மக்களுக்கு வளமான ஒளிமயமான வாழ்வை பெற்றுக்கொடுப்பதென்பதே எமது சிந்தனையாகவும் வெளிப்படைத் தன்மையான செயற்பாடுகளாகவும் உள்ளன.

எமது மக்களுக்கு கருத்து, பேச்சு, நடமாடும் சுதந்திர உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எமது வலுவான நிலைப்பாடாகும்.

நெடுந்தீவு மக்கள் எம்மீது காட்டும் அன்பும் பரிவும் கண்டு நான் மெய்சிலிர்த்துப் போனேன். பல அபிவிருத்திப் பணிகள் இன்னும் இங்கு மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் இருப்பதனால் அவற்றையும் எதிர்காலங்களில் தொடர்வதற்கான சந்தர்ப்பத்தையும் மக்கள் எனக்கு தருவார்கள் என்றும் நம்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

திக்கம் வடிசாலையை வருமானம் ஈட்டும் தொழிற்சாலையாக மாற்ற வேண்டும் – அதிகாரிகளுடனான கூட்டத்தில் அமைச்சர...
வடக்கு – கிழக்கில் ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கான தலைவர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்?...
நெடுந்தீவில் தடையற்ற மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் - துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்...

அமரர் சிவஞானசோதியின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி செயலமர்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு...
ஊர்காற்றுறை, கண்ணகி அம்மன் இறங்கு துறைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் - பயணிகள் போக்குவரத்தி...
நாட்டை ஆழ்பவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - கூட்டுப்பொறுப்போடு உழைக்க வாருங்கள் – தமிழ் நாடாளுமன்ற...