எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தவர் தோழர் ஜெயக்கொடி – டக்ளஸ் தேவானந்தா!

Monday, May 15th, 2017

எமது மக்களுக்கு வாழ்வியல் சார்ந்து அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக ஆரம்ப காலங்களில் ஈழ விடுதலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் மிகுந்த அக்கறையுடன் உழைத்தவர் தோழர் ஜெயக்கொடி என என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர்கள், பிரதேச நிர்வாக செயலாளர்கள் மத்தியில் தோழர் ஜெயக்கொடி மறைவு குறித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ஈழ விடுதலைப் போரட்டத்தின் ஆரம்ப காலங்களில் எமது மக்களின் நிம்மதியான சுதந்திரமான வாழ்வுக்காக அக்காலப்பகுதியில் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த சமயம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராக இருந்து அந்த அமைப்பை கட்டி வளர்ப்பதில் பெரும் பங்காற்றியிருந்தார்.

காலமாற்றத்தில் இந்தியாவுக்கு சென்று அங்க வாழ்ந்துவந்த தோழர் ஜெயக்கொடி  நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் காலமானார்.

இவரின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ள அதேவேளை அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் எனது கட்சியின் சார்பில் இறுதி அஞ்சலியை செலுத்துகின்றேன் எனவும் தெரிவித்தார்

இதனிடையே 1985 ஆம் ஆண்டு இதே நாளில் இடம்பெற்றிருந்த நெடுந்தீவு கடற்பரப்பில் குமுதினிப் படுகெகொலை சம்பவத்தில் உயிரிழந்த உறவுகளையும் நினைவு கூர்ந்து  ஒரு நிமிட மௌனவணக்கம் செலுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: