எமது பாதை சரியானது என்பதை வரலாறு நிரூபித்திருப்பதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்டளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, June 13th, 2020

எமது பாதை சரியானது என்பதை வரலாறு நிரூபித்திருப்பதாக தெரிவித்த  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி்ன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தமது வேலைத் திட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு மக்கள் ஆதரவு தளத்தினை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சாவகச்சேரியில் இன்று நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், அபிவிருத்தி திட்டங்கள் மாத்திரமன்றி தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களாக இருக்கும் அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் போனோரின் விவகாரம், இதுவரை விடுவிக்கப்படாத காணிகள் போன்றவற்றிற்கும் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை மக்கள் வழங்குவார்களாயின் குறித்த விடயங்களை இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts:

 இலங்கைத் தேயிலையின் தரத்தையும் நன்மதிப்பையும் பாதுகாக்க நடவடிக்கை அவசியம் - நாடாளுமன்றில் செயலாளர் ...
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் பாதிக்கப்படுவது உண்மையே – ஆனாலும் விஷேட சலுகை...
டோக்கியோ சிமேந்து நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை பூநகரியில் - முதல் கட்ட திட்ட வரைவு நிறுவனத்தின்...

காணத் தவறாதீர்கள்…. இன்று இரவு 10  மணிக்கு SUN NEWS தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் டக்...
மக்களுக்கு ஏமாற்றங்களை வழங்காது அனைவரும் ஒத்துழைப்புடன் சேவை செய்ய வேண்டும் - அதிகாரிகளுடனான சந்திப்...
நாம் மக்களுக்காக முன்னெடுத்திருந்த பெரும்பணிகளின் அறுவடைக் காலம் இது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!