எமது கூட்டு மக்களுடன் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 2nd, 2024

தேர்தல்களில் எமது கூட்டு மக்களுடனானதாக இருக்குமே தவிர இதர தமிழ் கட்சிகள் போன்று ஏனைய கட்சிகளுடன் வாக்குக்காக கூட்டுச் சேர நாம் விரும்புவதில்லை என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அதேநேரம் தேர்தல் முடிந்தபின்னர் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கை நிலைப்’பாட்டுக்கமைய எமது செயற்பாடுகள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்திருந்த அவர் மேலும் கூறுகையில் –

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதன் மறுகணமே வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம் என ஈ.பி.டி.பி தனது நிலைப்பாட்டை அறிவித்துவிட்டது.

குறிப்பாக 90 களிலிருந்து ஈ.பி.டி.பி மக்களுடன் தான் வாழ்ந்து வருகின்றது. அந்தவகையில் மக்கள் தான் ஈ.பி.டி.பி, ஈ.பி.டி.பிதான் மக்கள். அதனால்தான் மக்களுடன் எமது கூட்டு தொடர்ச்சியாக இருந்து வருகின்றது.

இதேநேரம் “ஸ்ராண்ட்’ இல்லாத சைக்கிள் போன்று நிலையில்லாத செயற்பாடுகளுடன் சுயலாபங்களுக்காக வேறு கட்சிகளுடன் சேர்ந்து கூட்டுவைத்துக் கொள்வதற்கு நாம் தயாராக இல்லை

ஆனாலும் தேர்தல் முடிந்தபின்னர் பின்னர் “மத்தியி கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்ற எமது கொள்கயைின் நிலைப்பாட்டுக்கமைய முடிவுகளை மேற்கொள்வோம்.

இதேநேரம் இம்முறை எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வடக்கு கிழக்கிலுள்ள தேர்தல் மாவட்டங்களுடன் கொழும்பு மாவட்டத்தையும்  போட்டியிட முடிவுசெய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கும் காணாமல் போன உறவுகளின் கண்ணீருக்கும் விரைவான தீர்வு வேண்டும் – பி...
கடற்றொழில் செயற்பாடுகளை சர்வதேச தரத்திற்கும் நியமங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பில் ...
கிளிநொச்சி சட்ட விரோத மணல் அகழ்வை தடுக்க நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுக்...