எமது கனவுகளும் எதிர்பார்ப்புகளும் கலைந்துவிடாது பாதுகாத்துத் தாருங்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் செல்வபுரம் மக்கள் கோரிக்கை

Friday, April 15th, 2016

நாம் தற்போது வாழ்ந்துவரும் ஓலைக்குடிசைகளை விட வழங்கப்படுகின்ற பொருத்து வீடுகள் எவ்வளவோ மேலானவை. அரசியற் காரணங்களுக்காக அவை எமக்கு கிடைக்கப்பெறாது போவதை தடுத்து நிறுத்தி நாம் காணும் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் கலைத்துவிடாது பாதுகாத்துத் தாருங்கள் என உரும்பிராய் செல்வபுரம் புகுதி மக்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

உரும்பிராய் செல்வபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி பொருத்து வீட்டை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேற்று(14) நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவ்வீட்டினது வசதிகள் மற்றும் சூழலியல் இயல்பாக்கம் தொடர்பாகவும்  கலந்துரையாடினார்.

இதன்போது அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது –

நீண்ட காலமாக எமது வாழ்க்கை தகர கொட்டகைகளுக்குள்ளும் ஓலை வீட்டுக்குளும் வாழ்ந்து முடிந்துவிட்டது. இனியாவது எமது பிள்ளைகளின் வாழ்க்கைகள் தற்காலிகமாகவேனும் வழங்கப்படவுள்ள பொருத்து வீட்டில்  நிம்மதியான  வாழ்க்கையாக அமைவேண்டும். அதற்காக வழங்கப்படவுள்ள இந்த பொருத்து வீட்டுத்திட்டத்தை அரசியற் காரணங்களுக்காக நிறுத்தப்படுவதை தடுத்து நிறுத்தி எமது கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் கலைத்துவிடாது பாதுகாத்துத் தாருங்கள்.

02

தற்போது ஓரளவேனும் தீர்வுகாண கூடிய வகையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீட்டுத்திட்டமானது பொருத்து வீடாக வழங்கப்படவுள்ளதால் எம்மை பெற்றுக்கொள்ள கூடாதென சில தரப்பினரிடமிருந்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இவர்களது குடும்பங்கள் வெளிநாடுகளில் இருப்பதனால் எமது கஸ்டங்கள் தெரிய வாய்ப்பு இருக்கப்போவதில்லை.

நீண்ட காலமாக எமது வாழ்க்கைக்கு எந்தவிதமான தீர்வுகளையும் பெற்றுத்தர முயற்சிக்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சில கட்சியினர் இத்திட்டத்தை எதிர்க்கின்றார்கள். ஆனால் எமது பிள்ளைகளின் வாழ்க்கைகள் இனி ஓலைக்குடிசைகளுக்குள்  இருப்பதை நாம் விரும்பவில்லை. பொருத்து வீடாக இருந்தாலும் அந்த வீடுகள் எமது வாழ்க்கைமுறையில் ஒரு முன்னேற்றத்தை கொண்டுவரும் என்று நாம் கருதுகின்றோம். எனவே கடந்த காலங்களில் பல்வேறுபட்ட இன்னல்களையும் தடைகளையும் தாண்டி நீங்கள் தமிழ் மக்களுக்காக பல்வேறு அபிவிருத்திகளையும் வாழ்வாதார வசதிகளையும் பெற்றுத்தந்திருந்தீர்கள். ஆகவேதான் உங்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்து இந்த கோரிக்கையை உங்களிடம் கோருகின்றோம் என தெரிவித்தனர்.

DSC04211

மக்களது கோரிக்கைகளுக்கு பதிலளித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாமும் உங்களுக்கு வழங்கப்படுகின்ற பொருத்து வீட்டுத்திட்டத்தை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் தற்போது ஆட்சியாளர்களுடன் ஐக்கியமாக இருப்பவர்கள் குறித்த வீட்டுத்திட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதே அரசுடன் மக்கள் நலன்சார்ந்து தேவைகளை முன்வைத்து இணக்கமான முறையில் பேசியிருந்தால் இந்த வீட்ட திட்டத்தை எமது கலாச்சாரம்,விருப்பு வெறுப்புகள் மற்றும் சூழலியலக்கு ஏற்றவகையில் அமைத்துக்கொள்ளும் வகையில் ஒரு உடன்பாட்டை எட்டியிருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாது தற்போது வீட்டுத்திட்டத்தில் அரசியல் செய்து வருகின்றனர். தற்காலிகமானதாகவேனும் அமையப்பெறும் இந்த திட்டத்தை பெற்றுக்கொள்ளதே உங்களது எதிர்காலத்திற்கு சிறந்ததாக அமையும் என தெரிவித்தார்.

மேலும் தமது பகுதியில் உள்ள உதயசூரியன் விளையாட்டுக்கழக மைதானத்தை இராணுவத்தினர் கைவசப்படுத்தி வைத்துள்ளதால் தமது கழகத்தின் விளையாட்டு செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் அதனை தாம் மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு தரும்படியும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இது  தொடர்பாக தான் குறித்த அதிகாரிகளது கவனத்தக்கு விடயத்தை கொண்டுசென்று மைதானத்தை பயன்பாட்டுக்கு பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தருவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

05

மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்காக புனர்வாழ்வு அமைச்சினால் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள 65000 வீடுகள் தொடர்பாக தற்போது பல்வேறுபட்ட விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் குறித்த வீடு தொடர்பாக ஆராய்ந்து அறிந்துகொள்ளும் முகமாக நேற்று செல்வபுரம் பகுதிக்கு சென்ற டக்ளஸ் தேவானந்தா அவ்வீடு தொடர்பாக குறித்த பகுதி மக்களுடனும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

03

04

01

Related posts:

யாழ். மருத்துவமனையில் சிவர்களுக்கானதனிப்பிரிவுவேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள...
வடக்கு- கிழக்கு கடற்றொழில் அபிவிருத்திக்கு ஜப்பான் நிதியுதவி – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு பலன்!
மக்களின் கருத்துக்களுக்கே முன்னுரிமை – ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சாதகமான பதில் கிடைக்கும் பட்சத்திலே...