எமது கட்சியின் வெற்றி என்பது நிச்சயம் எமது மக்களின் வெற்றியாக அமையும் – பண்டத்தரிப்பில் டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 18th, 2017

எமது கட்சியின் வெற்றி என்பது நிச்சயம் எமது மக்களின் வெற்றியாக இருக்குமே தவிர எமது சுயநலன்களுக்கானதாகவோ அன்றி சுபோகங்களுக்காகவோ இருக்கமுடியாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பண்டத்தரிப்பு சாந்தையில் நடைபெற்ற நிழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது மக்களுக்கான பிரச்சினைகள் பல இருக்கின்ற போதிலும் அவற்றுக்கான தீர்வுகளை காண விரும்பாத அல்லது தீர்க்க விரும்பாத போலித் தேசியவாதிகள் எமது மக்களின் பிரச்சினைகளை தீராப்பிரச்சினைகளாக வைத்துக்கொண்டு அதில் தமது சுயலாப அரசியலை நடத்திவருகின்றமையானது மிகுந்த வேதனையளிப்பதாகவே உள்ளது.

ஆனால் நாம் மக்களுடன் நின்று மக்களின் நாளாந்த பிரச்சினைகள் உள்ளிட்ட ஏனைய தேவைப்பாடுகளை தீர்த்துவைப்பதில் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் உழைத்து வருகின்றோம்.

இந்தப்ப குதியிலும் மக்களுடைய பல்வேறுபட்ட தேவைகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் முன்னுரிமை அடிப்படையில் உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்கள் பலத்தினால் வென்று அவற்றுக்கான தீர்வுகளை நிச்சயம் நாம் பெற்றுத்தருவோம் என்றார்.

இதனிடையே அங்கு நடத்தப்பட்ட தாச்சி மற்றும் கிறிக்கெற் சுற்றுப்போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களையும் பணப் பரிசில்களையும் வழங்கிவைத்தார்.

இதன்போது கட்சியின் வலிகாமம் தென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் (ஜீவா) கட்சியின் குறித்த பகுதியின் வட்டார வேட்பாளர் தர்மகுலசிங்கம்  ஆகியோர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related posts:

வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் பணிப்பெண்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் தேவை - நாடாளுமன்றில் டக்...
அரசியலில் பெண்களின் பிரதிநி தித்துவம் அதிகரிக்கப்படும்போது தான் சமூக மாற்றத்தை கொண்டு வரமுடியும் - ட...
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம அதித...

கரைவலை பிரச்சினைக்கு விஞ்ஞானபூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் தீர்வு - "வின்ஞ்" பயன்படுத்த அமை...
தனிப்பனைக் கிராமம் இரண்டாக பிரிவதை நிறுத்தித்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் செம்பியன்பற்று க...
யாழ்ப்பாணம் வருடைந்தார் ஜனாதிபதி ரணில் - சிறப்பு வரவேற்பளித்து வரவேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!