எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – பாதிக்கப்பட்ட கொடுவா மீன் வளர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கான 3 ஆம் கட்ட இழப்பீட்டை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட, நீர்கொழும்பு களப்பில் கூடுகளில் கொடுவா மீன் வளர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கான 3 ஆம் கட்ட இழப்பீட்டினை இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.
நக்டா எனப்படும் தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையினால் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட பாதிப்பு மதிப்பீட்டிற்கு ஏற்ப வழங்கப்பட்ட குறித்த நஸ்ட ஈட்டிற்கான காசோலைகள் சுமார் 55 பயனாளர்களுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை அந்நியச் செலாவணியை ஈட்டித்தரக்கூடிய, கடல் சார் உற்பத்திகளை ஊக்குவித்து நாட்டிற்கு நிலைபேறான பொருளாதார கட்டமைப்பிற்கு பங்களிப்பை வழங்கும் நோக்குடன் செயற்பட்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நுகபே கம்பஹா, குஞ்சாவத்தை பிரதேசத்தில் தனியார் ஒருவரின் முயற்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஏற்றுமதித் தரத்திலான அலங்கார மீன் வளர்ப்பு பண்ணையை பார்வையிட்டார்.
இதன்போது, குறித்த தொழில் முயற்சியை விஸ்தரிப்பதற்கு கடற்றொழில் அமைச்சினால் வழங்கக்கூடிய ஒத்தாசைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தார்.
அத்துடன் கடந்த 15 வருடங்களாக தூர்வாரப்படாமல் இருக்கின்ற உஸ்வெட்ட கொய்யாவ மீன்பிடி இறங்கு துறையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தினை தூர்வாருவதற்கான மதிப்பீட்டு அறிக்கை ஒன்றினை எதிர்வரும் செவ்வாய் கிழமை சமர்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|