ஊர்காவற்றுறையில் முச்சக்கரவண்டி சங்கம் – உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!
Friday, May 17th, 2024
ஊர்காவற்றுறை பிரதேசத்தில் அதிகளவிலான முச்சக்கரவண்டிகள் இருந்தும் அவைதமது சேவைகளை கட்டமைப்பு ரீதியாக முன்னெடுப்பதில் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக முச்சக்கரவண்டிகள் தமது சேவையை மேற்கொள்ள ஒரு சங்க கட்டமைப்பு இல்லாத காரணங்களால் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அதற்காக தமது பிரதேசத்திற்கு சங்க கட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்தி தருமாறும் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அமைச்சரின் யாழ் அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த குறிதத தரப்பினர் இவ்விடயம் தொடர்பிலும் தாம் எதிர்கொள்ளும் ஏனைய தொழில்சார் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தனர்.
குறித்த விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர், யாழ்மாவட்ட முச்சக்கர வண்டி சங்க நிர்வாகத்தினருடன் பேசி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தீவகத்தில் தற்போது சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளின் பட்டியலை ஒன்றினை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே அமைச்சரின் யாழ் அலுவலகத்திற்கு வருகைதந்த ஒப்பந்த அடிப்படையில் நீண்டகாலமாக யாழ் மாநகர சபையில் சாரதிகளாக பணியாற்றும் ஊழியர்கள் தமக்கான நிரந்தர நியமனங்களை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
தற்போதைய சூழலில் வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ளமையினால் தமக்கான வருமானம் அதற்கு ஈடுசெய்யும் வகையில் இல்லாதுள்ளது எனவும் தமது பணியை நிரந்தரமாக்கி தருவதனூடாக வாழ்வாதர பொருளாதாரத்தை நிரந்தரமாக மேம்படுத்திக்கொள்ள முடியும் எனவும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தாருங்கள் என கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


