ஊர்காவற்துறை தள வைத்தியசாலைக்கான உயிர் காக்கும் கருவிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிப்பு!

Friday, February 18th, 2022

ஊர்காவற்துறை தள வைத்தியசாலைக்கான உயிர் காக்கும் கருவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வைத்தியசாலை நிர்வாகத்திடம் குறித்த கருவிகளை வழங்கி வழங்கி வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.

இதன்போது தீவகத்தின் பிரதான வைத்தியசாலையாக இருக்கும் ஊர்காவற்துறை தள  வைத்தியசாலையின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் மேற்கொள்வதற்கு தடையாக இருக்கும் ஆளனிப் பற்றாக்குறை, மகப்பேற்று விடுதி விடயங்களுக்கு தீர்வினைப் பெற்றுத்தருமாறு குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இலங்கை உயர்கல்வி முறைமை பல்லாயிரக்கணக்கான இளைஞ ர்களுக்கு துரோகம் இழைக்கி ன்றது - நாடாளுமன்றில் டக்ளஸ...
கடந்த கால தவறுகளை மக்கள் உணர்ந்து கொள்வார்களாயின் எதிர்காலம் சுபீட்சமாகும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
தமிழர் பிரதேசங்களில் தமிழ் மொழி அமுல்ப்படுத்தப்பட வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!