உங்களுடன் ஒன்றர சேர்ந்து வாழ்வதே எனது கனவாகிறது -செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

மக்களாகிய உங்களுடன் என்றும் ஒன்றரக் கலந்திருப்பதையே நான் மனதார விரும்புகிறேன். கடந்த 10 வருடங்களாக மட்டக்களப்பு மண்ணுடன் மிகநெருக்கமாக இருந்து வேலை செய்ய முடியாமல் போனது மனதிற்கு வேதனை தருகின்ற விடயமே. எமது மக்களின் ஆயுதப் போராட்டத்திற்குத் தலைமைதாங்கிய காலப் பகுதியில் இம்மக்களுடன் ஒன்றரக் கலந்து வாழ்ந்தவன் என்ற வகையில் இம்மக்களின் மனங்களை நான் நன்கறிவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதி மக்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் நேற்று முன்னெடுத்திருந்த சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த காலங்கள் எவ்வாறு கழிந்திருப்பினும், எதிர்வரும் காலங்கள் எமக்கு பொற்காலமாக அமைய வேண்டும் என்பதே எனது அவாவாகும். இந்த மக்களுக்கு என்னாலான உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதோடு அவர்கள் மத்தியில் எதிர்காலத்தில் ஒன்றரக் கலந்து வாழ்வேன் என்ற நம்பிக்கையை உங்களுக்கு நான் இத்தருணத்தில் தரவிரும்புகிறேன்.
Related posts:
இறந்தவர்களை நினைகூருவதில் தவறில்லை – அரசியலாக்குவதே தவறு - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக தயவு தாட்சண்யமற்ற நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் பொலிஸாருக்கு வேண்ட...
இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குமாறு தமிழகம் கோரிக்கை - நிராகரித்துள்ளதா...
|
|