ஈ.பி.டி.பியின் கரங்களை வலுச்சேர்க்க செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் பயணிக்க அணிதிரளும் இளைஞர் யுவதிகள்!
Tuesday, October 8th, 2024
எமது கட்சியிடம் இருக்கின்ற நியாயத்தினை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில், கட்சியினால் மேற்கொள்ளப்படும் தேர்தல் பரப்புரைகள் அமைய வேண்டும் என்பதே தனது விருப்பமாகும். அதற்கான கடின உழைப்பு மிக அவசியம் எனவும் வலியுறுத்தினார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேலணை பிரதேசத்தின் வட்டாரங்களின் நிர்வாக செயலாளர்கள் செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேசத்தின் விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
மத்தியில் மாற்றம் எவ்வாறு முக்கியமானதாக இருந்திருக்கின்றதோ அதேபோன்றுதான் தமிழ் மக்களது அரசியல் பரப்பிலும் ஈ.பி.டி.பியின் அரசியல் பிரதிநிதித்துவ பலமும் வலுப்பெறுவது அவசியமானதொன்றாக இருக்கின்றது என சுட்டிக்காட்டிய ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஈ.பி.டிபியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே இருக்கின்றது. மத்தியில் உள்ள அரசாங்கத்தோடு ஆட்சியில் பங்கெடுப்பதற்கு நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் வழங்குகின்ற ஆணையின் பலமே அதற்கு அடிப்படையானது என தெரிவித்துள்ளார்.
இதேநேரம் ஈ.பி.டி.பியினராகிய எமது வழிமுறையே வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு சாத்தியமான தீர்வை தரும்.
எம்முடன் இணைந்து எம்மை அரசியல் ரீதியில் பலப்படுத்தி பயணியுங்கள் என நான் மக்களிடம் அழைப்பு விடுத்து வந்திருந்த போதும் அவர்கள் தவறானவர்களின் வழிநடத்தலிலிருந்து மீளமுடியாதிருந்தமையால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
மத்தியில் மாற்றம் எவ்வாறு முக்கியமானதாக இருந்திருக்கின்றதோ அதேபோன்றுதான் தமிழ் மக்களது அரசியல் பரப்பிலும் ஈ.பி.டி.பியின் அரசியல் பிரதிநிதித்துவ பலமும் அவசியமானதொன்றாக இருக்கின்றது.
அதனடிப்படையில் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் எமது வீணைச் சின்னத்தின் வெற்றியை வலுப்படுத்துவது அவசியமாகும். அதனூடாகவே எமது மக்களின் அபிலாசைகள் அதன் இலக்கை எட்டும் என நினைக்கின்றேன்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் யதார்த்த அரசியலையும், ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல் செயற்பாடுகளையும் அவர்களது அரசியல் பலத்தின் அவசியத்தையும் நன்கு உணர்ந்து வாக்களித்து வெற்றியடையச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


