இந்திய வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்க மாற்றுத் திட்டமொன்றும் தேவை! – டக்ளஸ் தேவானந்தா

Sunday, April 3rd, 2016

இந்திய  அரசாங்கம் எமது மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தர முன்வந்திருந்த நிலையில், 2010ம் வருடம் இத் திட்டத்தின் அடிப்படையிலான ஒரு வீட்டுக்கு தலா 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டது. தற்போது 7 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் அத் தொகையில் வீடு கட்ட இயலாதுள்ளதன் காரணமாக இத் திட்டத்தின் எஞ்சியுள்ள வீடுகளை அமைக்க மாற்றுத் திட்டமொன்று வகுக்கப்பட வேண்டியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், 2010ம் வருடம் முன்னாள் ஜனாதிபதியுடன் நான் இந்தியா சென்றிருந்தபோது இவ் வீட்டுத் திட்டம் தொடர்பிலான கோரிக்கைளை முன்வைத்திருந்தேன். அதன்போது முன்னாள் இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங், முன்னாள் அமைச்சர்களான ப. சிதம்பரம், பிரனாப் முகர்ஜி, ஏ. கே. அந்தோனி, எஸ். எம். கிருஸ்ணா உட்பட்வர்கள் உடனிருந்து இத் திட்டத்திற்கு உடன்பட்டு நிதி ஒதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டது.

இத் திட்டம் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வந்து, பல்வேறு காரணங்களால் தாமதமடைந்திருக்கும் நிலையில், தற்போது இத் திட்டத்தின் எஞ்சியிருக்கும் வீடுகளை அமைக்க அந்த நிதி போதாது என்பதால், அதனை அதிகரித்து, மேற்படி வீடுகளை எமது மக்கள் பெற மாற்று திட்டமொன்று அவசியமாக உள்ளதென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசிடம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: