அரிசி தட்டுப்பாடு பற்றிய வாதப் பிரதிவாதங்களைவிட விவசாயிகளுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

நாட்டில் தற்போது அரசிக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும், இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப் போவதாகவும் அரச தரப்பில் கூறப்படுகின்ற நிலையில், அரிசிக்கான தட்டுப்பாடு ஏன் இந்த நாட்டில் நிலவுகின்றது என்பது குறித்து ஆராய்ந்து அதற்கான அடித்தளங்களை மேம்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்விவிடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், தற்போது நாட்டிலே பெரும்போக அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இம்முறை சுமார் 12 இலட்சம் மெற்றிக் தொன் நெல்லினைப் பெறக்கூடியதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுவதாகவும், இத் தொகையானது எமது நாட்டு மக்களின் நுகர்வுத் தேவையினைப் பொறுத்த வரையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரைக்கும் போதுமானதாக இருக்குமெனவும் அகில இலங்கை விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ள நிலையில், அளவுக்கதிகமான அரிசியினை இறக்குமதி செய்தால் எமது நாட்டு உற்பத்திக்கு பாரியளவில் பாதிப்புகள் ஏற்படும் என்பதை அரசு அவதானத்தில் கொண்டு, இறக்குமதியில் ஈடுபட வேண்டும்.
அதே நேரம், அம்பாறை மாவட்டத்தில் அறுவடை செய்யப்படுகின்ற நெல்லுக்கு நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒழுங்கான விலை நிர்ணயங்கள் மேற்கொள்ளப்படாத நிலையும், கொள்வனவு செய்யக்கூடிய நெல்லை களஞ்சியப் படுத்துவதற்கான வசதிகளின்மையும் காணப்படுவதாகத் தெரிய வருகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் விவசாய மக்கள் தாங்கள் அறுவடை செய்கின்ற நெல்லை பாதைகளில் பரப்பி உலர விடுகின்ற நிலைமைகளைக் காணக்கூடியதாக இருக்கிறது. கிளிநொச்சி மாவட்ட விவசாய மக்களுக்கு போதியளவு நெல் உலர வைக்கக்கூடிய தளங்கல் மற்றும் அரிசி ஆலைகள் இல்லாத நிலையில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தாங்கள் உற்பத்தி செய்கின்ற நெல்லை குறைந்த விலையில் பிற மாவட்டத்தவர்களுக்கு விற்று, அதிக விலை கொடுத்து பிற மாவட்டங்களிலிருந்து வரும் அரசியை பெறும் நிலைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இம் மாவட்ட விவசாய மக்களின் நலன் கருதி நெல் உலர்வுத் தளங்கள் மற்றும் அரிசி ஆலைகளை அமைப்பதற்கு உதவுமாறு நான் அரசிடம் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன்.
எனவே, நாட்டில் அரசி தட்டுப்பாடு குறித்து ஒவ்வொரு தரப்பினரும் வாதப் பிரதிவாதங்களை செய்து கொண்டிருக்காமல், எமது நாட்டின் நெல் உற்பத்தியாளர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, நெற் பயிர்ச் செய்கையை மேலும் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் - ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்தா!
நீதி கேட்டு போராடும் துணிச்சலை எமது மக்கள் மனதில் விதைத்தவர்கள் நாங்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி பிரச்சினைகளுக்குதுரித தீர்வை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக...
|
|