அரசாங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்ட மண்ணெண்ணை அமைச்சர் டக்ளஸ் – இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் ஆகியோரால் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கையளிப்பு!

Saturday, May 28th, 2022

இந்திய அரசாங்கத்தினால் வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக வழங்கி வைக்கப்பட்ட 15,000 லீற்றர் மண்ணெண்ணை வந்தடைந்துள்ள நிலையில், அவை ஊர்காவற்துறையில் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டன.

வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 15,000 லீற்றர் மண்ணெண்ணையை பயனாளர்களுக்கு வழங்கும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக இன்று ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இநநிலையில் கடற்றொழிலாளர்களுக்கான மண்ணெண்ணையை கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஸ  நடராஜன் ஆகியோர் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது எமது மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடைய முக்கிய விடயமாகும் - டக...
‘எண்டபிரைஸ் சிறி லங்கா’ திட்டம் வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளை நிறைவுசெய்யவில்லை – நாடாளுமன்றில் டக...
பொதுஜனப் பெருமுன தமிழ் முஸ்லீம் கட்சிகளை அரவணைத்துச் செல்வதன் அடையாளமாக இருப்பவர் அமைச்சர் டகளஸ் தேவ...