அம்பாறை தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகள் அனைத்தும் தீர்க்கப்படும்: அடித்துக் கூறுகின்றார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, July 27th, 2020

அம்பாறை மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் அபிலாசைகளையும் தீர்த்து வைத்து வைக்க வேண்டிய தார்மீக கடமை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு இருக்கின்றது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புதிய அரசாங்கத்தில் அவற்றை நிறைவேற்றுதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஈ.பி.டி.பி. மேற்கொள்ளும் என்று திடமாக தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வீணை சின்னத்தில் போட்டியிடுகின்ற நிலையில், குறித்த வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் கல்மனை, நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கு தாயகமெங்கும் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் அரசியல் அபிலாகைள், அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள் போன்ற அனைத்துச் செயற்பாடுகளையும் தீர்த்து வைக்க வேண்டிய தார்மீகக் கடமை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு இருப்பதாக தெரிவித்தார்.
அதேவேளை அம்பாறை மக்களைப் பொறுத்த வரையில் விசேடமான பிரச்சினைகளும் சிறப்பான எதிர்பார்ப்புக்களும் இருப்பதாக தெரிவித்த அமைச்சர், கஞந்த காலங்களில் அம்பாறை மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் குறித்த விவகாரங்களில் கவனம் செலுத்தவில்ல எனவும் குற்றஞ்சாட்டியதுடன் எதிர்காலத்தில் அவை தொடர்பில் ஈ.பி.டி.பி. நிச்சயம் கவனம் செலுத்தும் என்று தெரிவித்ததுடன் நடைபெறவுள்ள தேர்தலில் அம்பாறையில் ஈ.பி.டி.பி. இன் கரங்களை மக்கள் பலப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related posts: