அமைச்சர் டக்ளஸ் முல்லைத்தீவு விஜயம் – கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

கரைத்துறைப்பற்று, புதுமாத்தளன் பிரதேச கடற்றொழிலாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல், புதுமாத்தளன் மீனவர் சனசமூக நிலையக் கட்டிடத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது, எதிர்கொள்ளுகின்ற தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக பிரதேச கடற்றொழிலாளர்களினால் கடற்றொழில் அமைச்சருக்கு தெளிவுபடுத்தப்பட்டது. குறிப்பாக, லைலை வலை தொழிலை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தினை தெளிவுபடுத்திய கடற்றொழிலாளர்கள், அதற்கான அனுமதி வழங்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.
இந்நிலையில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி சட்ட வரையறைகளுக்கு அமைய சாத்தியமான முடிவினைப் பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இதனிடையே
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகளை விஸ்தரித்து மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று புதுகுடியிருப்பில் இடம்பெற்றது.
கட்சியின் செயலாளர் நாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், முல்லைத்தீவு மாவடத்தினை சேர்ந்த பிரதேச சபைகளின் ஈ.பி.டி.பி.உறுப்பினர், மாவட்ட கட்சி முக்கியஸ்தர்கள், கட்சியின் தேசிய அமைப்பாளர் ஆகியோருடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|