அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு யாழ்ப்பாண மக்கள் பிரமாண்ட வரவேற்பு: வீதியெங்கும் விழாக்கோலம்!
Friday, November 9th, 2018
அமைச்சராக பொறுப்பேற்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ்ப்பாண மக்கள் மிகப் பிரமாண்டமான முறையில் வரவேற்பளித்துள்ளனர்.
புதிய அரசில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சுப் பொறுப்பேற்ற பின்னர் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொண்டு இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகைதந்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வரவேற்கும் முகமாக யாழ் நகரப்பகுதிகளின் வீதியெங்கும் பதாதைகள் கட்டி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பச்சை, மஞ்சள், சிவப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வீதிகளெங்கும் விழாக்கோலமாக காட்சியளிக்கின்றன.
யாழ்ப்பாணம் வேம்படிச் சந்தியில் திரண்டிருந்த பெருந்திரளான மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பெருங்கரகோசங்களுக்கு மத்தியில் பொன்னாடை போர்த்து மாலை அணிவித்து மகத்தான வரவேற்பளித்தனர்.
அதன்பின்னர் யாழ் மத்திய கல்லூரி மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வேம்படி சந்தியிலிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ வைத்தியசாலை வீதியூடாக ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு வைத்தியசாலை முன்றல், யாழ் மத்திய பஸ் நிலையம், பழக்கடை வியாபார நிலையம் ஆகிய இடங்களில் ஊழியர்களாலும் வர்த்தகர்களாலும் வரவேற்கப்பட்டார்.

Related posts:
|
|
|


