அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம்!

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது
யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேசவாரியாக நடைபெறும் நிலையில் இன்றையதினம் பிற்பகல் கோப்பாய் பிரதேச செயலக பிரிவுகளுக்கான கூட்டம் யாழ்-கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக பிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அதற்கு முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் இனங்கண்டு அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளும் முகமாக பிரதேச செயலரின் ஒழுங்கு படுத்தலில் குறித்த கூட்டம் இடம்பெற்றது.
இதனிடையே
நல்லூர் பிரதேச செயலக பிரிவுக்கான அபிவிருத்தி குழுக் கூட்டமும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் கடல்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்றது.
நல்லூர் பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்தலில் ஆரம்பமான கூட்டத்தில், குறிப்பாக நடப்பு ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் ஊடக பிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அதனூடாக மேற்கொள்ள திட்டமிடப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் பிரதேசத்தின் பல்துறைசார் முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|