அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

Friday, February 16th, 2024

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்று இன்றையதினம்(16) காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறித்த கூட்டம் ஆரம்பமானது.

குறித்த கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இவ்வருடத்தில் முன்டெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டது

குறித்த கூட்டத்தில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: