அமைச்சர் டக்ளஸை சந்தித்த கூட்டமைப்பின் MP செல்வம் அடைக்கலநாதன் – மன்னார் கடற்றொழிலாளர் தொடர்பில் கலந்துரையாடல்!
Wednesday, November 15th, 2023
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கொழும்பில் இன்று(15) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மன்னார் கோந்தைப்பிட்டிப் பகுதியில் அமைந்துள்ள மீன்பிடி இறங்குதுறை தொடர்பாகவும், மன்னாரில் கடலட்டை பிடிப்பில் ஈடுபடுபவர்களுக்கான அனுமதிகள் தொடர்பாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பு கடற்றொழில் அமைச்சில் இன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,
குறித்த இறங்குதுறைப் பகுதியில் கடற்றொழிலாளர்கள் தடைகளின்றி தமது செயற்பாடுகளை முன்னெக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதுடன், கடலட்டை பிடிப்பில் ஈடுபடுவதற்கான அனுமதி தொடர்பாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாடுமாறும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


