அமைச்சர் டக்ளஸின் பங்களிபுடன் பெருவளர்ச்சி பெற்றுவரும் யாழ் முத்தமிழ் பகுதி மக்கள்!

Saturday, August 3rd, 2024


…….
யாழ் கொட்டடி முத்தமிழ் சனசமூக நிலையத்தின் விளையாட்டு மைதனத்திற்கான இரவுநேர  மின் ஒளி இணைப்பை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

குறித்த பகுதி இளைஞர்களின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக சுமார்  பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

இதைதடுத்து மின் கம்பங்கள்  மைதானதை சுற்றி பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்நிலையில் குறித்த மின் ஒளி இணைப்புகளை வழங்கும்
நிகழ்வு இன்று (03.08.2024)
மாலை நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக  கலந்துகொண்டு சிறப்பித்த  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மின்னொளி இணைப்பு ஆழியை அளுத்தி ஆரம்பித்து வைத்ததுடன் மின்னொளியில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியையும் ஆரம்பித்துவைத்திருந்தார்.

அத்துடன் குறித்த உதைபந்தாட்ட போட்டியில் பங்கெடுத்த இரு அணியினருக்கும் கட்சி நிதியிலிருந்து  தலா 25 ஆயிரம் ரூபாய்களையும் வழங்கிவைத்திருந்தார்.

முன்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முழுமையான பங்களிபுடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் கொட்டடி முத்தமிழ் விளையாட்டுக் கழகத்துக்கான விளையாட்டு மைதானத்தை கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம்  15 ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன்  சம்பிரதாய பூர்வமாக நாடா வெட்டி திறந்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: