அமரர் சுந்தரம் டிவகலாலாவின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர் வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை!

Saturday, January 14th, 2023

அமரர் சுந்தரம் டிவகலாலாவின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர் வளையம் சாத்தி மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் மத்தியில் வாழ்ந்து வந்த கல்விசார் ஆளுமையும், அரசாங்க நிர்வாக அதிகாரியாகவும், வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் கல்விச் செயலாளராகவும் கடமையாற்றி காத்திரமான சேவைகளை செய்தவருமான அமரர் சுந்தரம் டிவகலாலா கடந்த 12.01.2023 அன்று காலமானார்.

இந்நிலையில் வண்ணார்பணையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திற்கு இன்றையதினம் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமரரின் பூதவுடலுக்கு தமது இறுதி அஞ்சலிகளை செலுத்தியதுடன் இறுதிக் கிரிகைகளிலும் கலந்து கொண்டிருந்தார்.

அத்துடன் அமரரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பத்தினிபுரம் கிராம மக்களது மயான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் தேவானந்தா!
புகையிரத சேவையில் பாரிய சுகாதாரச் சீர்கேடுகள்: தமிழ் மொழியும் புறக்கணிப்பு – நாடாளுமன்றில் டக்ளஸ் எம...
யாழ்ப்பாணத்தில் இவ்வருடம் 600 வீட்டுத் திட்டம் - இறுதிப் பட்டியல் காட்சிப்படுத்த வேண்டும் என அமைச்...